கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட கணவர். கை கால்கள் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்புலன்சில் மனைவி மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணத்தின் போது எனது பெற்றோர் 30 பவுன் நகை, பைக் வாங்க என் கணவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், 3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் திருமண செலவு 6 லட்சம் என விமர்சையாக திருமணம் செய்து வைத்தனர்.
எனது மாமனார் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மபுரம் காவல் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிவதால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை தனியார் மருத்துவமனையில் ரூபாய் 6 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எனது உறவினர்களிடம் கடன் வாங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை. எனவே என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்து, துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்த மாமனார் மாமியார் மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தனது கோரிக்கை மனுவினை அவர் அளித்தார். மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதி அளித்தார்.