spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…

1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…

-

- Advertisement -

மலைக்குன்றின் மேல் பதுங்கிய  இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை மலை உச்சியிலிருந்து மீட்க 10 மணி நேரமாக போலீசார்  போராடி வருகின்றனா்.
1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல  ரவுடி பாலமுருகன் (30). இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி என தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை உள்ளன.  கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிக்கிய திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி திருச்சூர் சிறையில் கைதியாக உள்ளார்.

அண்மையில் திருட்டு வழக்கு ஒன்றிற்காக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தமிழ்நாட்டு போலீசார் கேரளா சென்று அவரை அழைத்து வந்து அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.‌ சிறைச்சாலை வாசலில் தமிழ்நாட்டு போலீசார் மூன்று பேரை தாக்கிவிட்டு கடந்த மாதம் 4 ஆம் தேதி தப்பிச் சென்றார்.

we-r-hiring

ஒரு மாத காலமாக தமிழ்நாடு மற்றும் கேரள போலீசாருக்கு போக்கு காட்டிய பாலமுருகன் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கடையத்திற்கு வந்தார். அங்கு தன் மனைவி ஜோஸ்வினாவை சந்தித்த அவர் போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை குறித்து தெரிவித்து நாம் எங்கேயாவது தப்பித்து சென்று விடுவோம் என கூறினார். தனியாக இருப்பதை விட கணவனுடன் சென்று தலைமறைவான வாழ்க்கை வாழ்வதே மேல் என நினைத்து அவருடன் சென்றார் மனைவி.

பாலமுருகன் கடையதிற்கு வந்தது குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.‌ இதையடுத்து தனிப்படை போலீசார் அவர் வீட்டிற்கு தேடிச் சென்றனர். அதற்குள் பாலமுருகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடையம் ராமநதி அணை அருகே உள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள மலைக்குன்றிற்கு சென்றார். இதையறிந்த போலீசார் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதியை சுற்றி வளைத்தனர். பாலமுருகன் மலைக்குன்றின் உயரமான பகுதிக்கு சென்று மறைந்து கொண்டார்.‌ அப்போதும் பாலமுருகன் போலீசாரிடம் சிக்கவில்லை. சற்று இருட்டத் தொடங்கியதாலும், பலத்த மழை பெய்ததாலும் பாலமுருகனை தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய 5 காவலர்கள் மீண்டும் இறங்க முடியாமலும், மேலே ஏற முடியாமலும்  சிக்கிக் கொண்டனர். சுமார் 1000 அடிக்கு மேல் உயரத்தில், பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் மேலே ஏறவும், முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் சிக்கித் தவித்தனர்.  இதனால் குற்றவாளியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. குற்றவாளி பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல குற்றவாளியை பிடிக்க களமிறங்கிய போலீசாரையும் மீட்பது முக்கியம் என உணர்ந்தது காவல்துறை. உடனடியாக ஆலங்குளம், தென்காசி, சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். சக்தி மிக்க லேசர் ஒளி விளக்கு பொருத்தப்பட்டு காவலர்களை மீட்கும் பணியில் வீரர்கள் இறங்கினர்.

தென்காசி மாவட்ட எஸ்பி. அரவிந்தன் ஆலங்குளம், டிஎஸ்பி பிளாக்சன் ஜோஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.‌  சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அதிகாலை 3 மணிக்கு 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற இருவரையும் மீட்கும் பணி லேசான மழையில் நீடித்தது. காலை 6:30 மணிக்கு மற்ற இருவரும் மீட்கப்பட்டனர்.

இதனிடையே மலைப் பகுதியில் தனது மனைவி ஜோஸ்வினாவுடன் நேற்று மாலை 4 மணிக்கு மலைப்பகுதியில் பதுங்கிய பாலமுருகனை ட்ரோன் கேமரா மூலம் டி எஸ் பி தலைமையில் போலீசார் 18 மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர். மலைப்பகுதியைச் சுற்றி தற்போது 50க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதி முழுவதுமே போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மழைப்பொழிவு அவ்வப்போது இருப்பதால் தேடும்படியில் சுணக்கம் நீடிக்கிறது. எப்படியானாலும் பாலமுருகனை மீட்டே தீருவோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். மழை நேரத்தில் ஆயிரம் அடி உயரமுள்ள மலை குன்றில் ஐந்து போலீசார் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக மழையை விட்டு இறங்க முடியாமல் தனித்த நிகழ்வு தென்காசி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌

நேற்று மாலை தனது மனைவியுடன் பதுங்கி இருந்த பாலமுருகன் மழையில் வைத்தே போலீசார் பிடித்தனா். பின்னா் அவரது மனைவியை பெண் போலீசாரின் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.‌

பாலமுருகன் குறித்து போலீசாரிடம் விசாரித்த போது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

குற்றவாளியாக இருந்தாலும் பாலமுருகன் தன் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர். எந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் தப்பித்து வந்து மனைவி பார்த்துவிட்டு சொல்வாராம்.

மேலும் சிறைச்சாலையில் இருக்கும் போது மற்ற கைதிகள் போல அல்லாமல் திருடுவதற்கும் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்கும் உதவியாக உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்துவாராம். சக கைதிகளிடம் முட்டை சிக்கன் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு அதற்கு ஈடாக ஒருவேளை சோற்றைக் கூட கொடுப்பாராம். சாதாரணமாக ஓரிரு போலீசாரால் அவரை கட்டுப்படுத்த முடியாது என்கின்றது காவல்துறை.

தவெகவில் இணைந்த புதுவரவு…பலமா? பலவீனமா?

MUST READ