spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் - மனைவி உட்பட 3 பேர் கைது…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…

-

- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் - மனைவி உட்பட 3 பேர் கைது…ஓசூர் அருகே தளி அடுத்துள்ள கெபரேதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமப்பா (40.) இவரது மனைவி பாக்கியா (32) இவர் அகலக்கோட்டை கிராமத்தில் வனகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (44) என்பவருக்கு சொந்தமான நர்சரி பண்ணையில் வேலை செய்து வந்தார். கடந்த 20 ஆம் தேதி சாமப்பா, தனது நண்பர் நாகமணி என்பவருடன் கர்நாடகா மாநிலம் கொலகண்ட ஹள்ளி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து அதே நாளில் நாகமணி ஊருக்கு திரும்பி வந்த நிலையில், சாமப்பா வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

கணவன் வீட்டுக்கு வராதது குறித்து அவரது மனைவி பாக்கியா காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் வற்புறுத்தலால், கடந்த 30 ஆம் தேதி தளி காவல் நிலையத்தில் அவர் கணவனை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் அளித்துள்ளார். இதனால் பாக்கியா மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் சாமப்பா காணாமல் போனது குறித்து பாக்கியாவிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர்.

we-r-hiring

போலீசாரின் விசாரணையில் பாக்கியாவிற்கும் அவர் வேலை செய்த நர்சரி பண்ணை உரிமையாளர் பால்ராஜ்க்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது பாக்கியா கணவர் சாமப்பாவிற்கு தெரியவரவே அவர் பாக்கியாவை கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவர் இருந்ததால் அவரை தீர்த்து கட்ட பாக்கியா மற்றும் பால்ராஜ் திட்டமிட்டுள்ளனர். அந்த நேரத்தில் பால்ராஜின் நண்பரான மஞ்சுகிரி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (25) என்பவருக்கு வரும் 10 ஆம் தேதி நடக்க உள்ள திருமணத்திற்கு பண தேவை இருந்துள்ளதை அறிந்த பால்ராஜ் 2.50 லட்சம் ரூபாயை சீனிவாசனிடம் கொடுத்து சாமப்பாவை தீர்த்து கட்டுமாறு கூறியுள்ளார். அவரும் பணத்தேவை இருந்ததால் மறுக்காமல் வாங்கி கொண்டார்.

கடந்த 20 ஆம் தேதி கர்நாடகா சென்ற சாமப்பாவுடன் இருந்து நாகமணியை பிரித்து நந்திமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்று இறக்கிவிட்டனர். அதன் பின், மதுபோதையில் இருந்த சாமப்பாவை அகலக்கோட்டை அருகே வைத்து வனத்துறையினர் என ஏமாற்றி விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி சீனிவாசன் உள்ளிட்ட இரண்டு பேர் கடத்தி சென்றுள்ளனர். ஆனால் சாமப்பாவை கொலை செய்யாமல் அவர்கள் கர்நாடகாவில் வேலைக்கு சேர்த்து விட்டு அவரது செல்போனை சுவிட்ஸ் ஆப் செய்துள்ளனர். மேலும் ஊர் பக்கம் செல்ல வேண்டாம் என சாமப்பாவிடம் கூறி விட்டு நர்சரி பண்ணை உரிமையாளர் பால்ராஜிடம் சாமப்பாவை கொலை செய்துவிட்டதாக சீனிவாசன் கூறி உள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் சாமப்பாவை மீட்ட போலீசார் கடத்தல் சம்பவத்தின் குற்றவாளிகளான சாமப்பாவின் மனைவி பாக்கியா, அவரது கள்ளக்காதலன் பால்ராஜ், கடத்தலில் ஈடுபட்ட சீனிவாசன் ஆகிய, 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?

MUST READ