சென்னையில் ஓய்வு பெற்ற மாஜிஸ்ட்ரேட் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டாா்.திவாகர் தனக்கு திருமணமானதை மறைத்து மாஜிஸ்ட்ரேட் மகளோடு பழகி வந்துள்ளாா். இந்நிலையில், திவாகருக்கு திருமணமானது தெரிந்தவுடன் மாஜிஸ்ட்ரேட் மகள் விலகி சென்றுள்ளாா். அவா் விலகி சென்றதை அறிந்த திவாகா் அவருக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், டிபிஐ வளாகத்தில் வைத்து மாஜிஸ்ட்ரேட் மகளை திவாகர் தாக்கியுள்ளார்.
மேலும் தனியார் டிடெக்டிவ் மூலமாக அந்த பெண்ணின் கால் டீட்டெய்ல் போன்றவற்றை எடுத்து வைத்து கொண்டு மிரட்டல் விடுத்தோடு, அவருக்கே தெரியாமல் சிசிடிவி கேமராக்களை வைத்து பின் தொடர்ந்துள்ளனர். இதனால் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற மாஜிஸ்ட்ரேட் மகள் புகாா் அளித்துள்ளாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீசாா் வழக்கு பதிவு செய்து அவரது முன்னாள் காதலன் திவாகர், திவாகரின் நண்பர் சக்தி சரவணன், தனியார் டிடெக்டிவ் ஸ்டாலின் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.
