spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு...

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…

-

- Advertisement -

காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தியாகு (50).  இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருகிறார். மாதம் இருமுறை காரைக்குடிக்கு வருவது வாடிக்கை அதற்காக மாடி வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வந்தால் தங்குவதற்கு கீழ் தளத்தை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

we-r-hiring

இது குறித்து மாடியில் வசிப்பவர் மற்றும் தியாகு வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தியாகு சென்னையிலிருந்து தற்போது காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பின்பு தான் வேறு ஏதேனும் பொருள்கள் திருடுபோய் உள்ளதா? என்று தெரிய வரும் காரைக்குடி வடக்கு காவல் துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் பகுதியில் கடப்பாரையின் மூலம் 5 கடைகளை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதேபோல நேற்று இரவு தியாகு வீட்டிலும் முன்பக்க கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே சென்று இருப்பது தெரிய வருகிறது இதனால் திருப்பத்தூரில் நடந்த திருட்டு சம்பவத்திற்கும் காரைக்குடியில் நடந்த திருட்டு சம்பத்திலும் ஈடுபட்ட நபர் ஒரே நபராக இருக்கலாம் என்ற கோணத்தில்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆதீனத்தினத்திற்கு முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் – காவல் துறை கோரிக்கை

MUST READ