Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, அஸ்வத்தமன், நாகேந்திரன் உள்ளிட்ட  23 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ராஜேஷ், கோபி, குமரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைதுபுதூர் அப்பு என்பவரின் கூட்டாளி என்பவர் ராஜேஷ்  சம்போ செந்தில், மற்றும்  கிருஷ்ணன் ஆகியோரோடு தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட கோபி, குமரன் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகள் கொண்டு வந்து ராஜேஷிடம் கொடுத்து , ராஜேஷ் மூலமாக ஹரிஹரனிடம் நாட்டு வெடிகுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

மூவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மொத்தம் கைது எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ