Homeசெய்திகள்க்ரைம்5 ஆயிரம் கோடி மோசடி -  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

5 ஆயிரம் கோடி மோசடி –  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

-

அதிக வட்டி தருவதாக கூறி 5 ஆயிரம் கோடிக்கு மேல்  மோசடியில் ஈடுபட்ட  நியோமேக்ஸ் நிறுவனத்தின் மேலும் முக்கிய இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது. 600 பேரிடம் ரூபாய் 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் இதுவரையும் கைது செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.

5 ஆயிரம் கோடி மோசடி -  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

மதுரையை தலைமை இடமாக கொண்டு தமிழக முழுவதும் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது நியோ மேக்ஸ் நிறுவனம். நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்ததின் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய இயக்குநராக கமலக்கண்ணன், வீரசக்தி பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

5 ஆயிரம் கோடி மோசடி -  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

இதில் கமலக்கண்ணன் மற்றும் சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து   செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடிய வழக்கம் தற்போது விசாரணையில் இருந்து வருகின்றது. மேலும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் மூடி போலீஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனத்தின் 750 வங்கிக் கணக்குகள் அனைத்தும் பண பரிவர்த்தனைகளை போலீசாரல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் நேற்று மேலும் இரண்டு முக்கிய இயக்குனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 ஆயிரம் கோடி மோசடி -  நியோமேக்ஸ் நிறுவனத்தின்  இரண்டு நிர்வாகிகள் அதிரடி கைது!

நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரான சிவகங்கை மாவட்டம் சேர்ந்த அசோக் மேத்தா இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 400 பேரிடம் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாகி இருந்தநிலையில் அசோக் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அதே போன்று டிரைடாஸ் பிராபர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரான மதிவாணன். இவர் 200 பேரிடம் 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் மதுரை மாவட்ட பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

MUST READ