- Advertisement -
சிவகாசியில் சட்டவிரோத குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை! சுகாதார துறை இயக்குனர் அதிரடி!!

சிவகாசி அருகே மாரனேரியில் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதிக்கு 4வதாக பிறந்த 30 நாட்களே ஆன பெண் குழந்தையை 40ஆயிரம் ரூபாய்க்கு நாகர்கோவில் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராமப்புற செவிலியர் முத்துமாரியை, பணியிடை நீக்கம் செய்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் கலு சிவலிங்கம், ஒப்பந்த அடிப்படை பணியிலிருந்த செவிலியர் அஜிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னையில் உள்ள ஊரக நலப்பணிகள் துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார்.


