Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலையில் உணவு டெலிவரி ஊழியர்கள் வேடத்தை தேர்ந்தெடுத்து எப்படி? திடுக்கிடும் பின்னணி

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உணவு டெலிவரி ஊழியர்கள் வேடத்தை தேர்ந்தெடுத்து எப்படி? திடுக்கிடும் பின்னணி

-

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. கொலை செய்வதற்கு உணவு டெலிவரி ஊழியர்கள் வேடத்தை தேர்ந்தெடுத்து திட்டமிட்டது யார் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. சம்பவம் நடந்த இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் மரணம் அடைந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கை அந்த இடத்த கொலை செய்ய திட்டமிட்டு கொலைக்கு மூளையாக செயல்பட்டது ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு என்பது குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர். அந்த கொலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்த கொலையில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் தான் அந்த கொலையில் உள்ள மர்மங்கள் வெளியே வந்தது.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆம்ஸ்ட்ராங் பெரிய நபராக வலம் வந்திருக்கிறார். இது வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நாகேந்திரனுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஸ்வத்தாமனுடன் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் பிரச்சனை செய்துள்ளார். மேலும் வழக்கு ஒன்றில் அஸ்வத்தாமன் கைதானதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என நாகேந்திரன் நினைத்திருக்கிறார். இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் இருந்தே திட்டம் தீட்டிய நாகேந்திரன் அவருக்கு யார் யார் எதிராக இருக்கிறார்கள் என தேடியுள்ளார்.

அப்படி வந்தவர்தான் ஆற்காடு சுரேஷ்-ன் தம்பியான பொன்னை பாலு. மேலும் ஆம்ஸ்ட்ராங் மீது சம்போ செந்திலும் கோபமாக இருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் சேர்த்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாகேந்திரன் திட்டம் தீட்டி இருக்கிறார். கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலுவுக்கும், பணம், நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை கொடுக்கும் பொறுப்பு சம்போ செந்திலுக்கும், கொலையை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடம் கொடுக்கப்பட்டது.

மேலும் கொலை குறித்து பேசுவது யாருக்கும் தெரிந்த விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விபிஎன் மூலம் பேசி இருக்கின்றனர். உணவு டெலிவரி ஊழியர்கள் போல் கொலை செய்ய வேண்டும் என்பது பொன்னை பாலுவின் திட்டம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை திட்டம் குறித்து நாகேந்திரன் ஒன்று கூடி திட்டத்தை விளக்கி இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மட்டும் 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இன்னும் அடுத்த கட்ட குற்றப்பத்திரிக்கையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ