திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம்மில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த வாடகையாளர்கள் ஏடிஎம் இயந்திரம் இயங்காமல் இருந்து வந்ததையும் ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் உள்ள கேமரா மற்றும் ஏடிஎம் மையத்தின் மேல் உள்ள சிசிடி கேமரா பகுதியில் கருப்பு நிற ஸ்பிரே அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து. அது தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் தகவல் ஆனது தெரிவித்துள்ளனர்.

கட்டிட உரிமையாளர் சங்கர் என்பவரும் பணம் நிரப்பும் ஊழியரிடம் அது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அன்று இரவு 11 மணி அளவில் பணத்தை நிரப்ப வந்த ஊழியர்களோ ஏடிஎம் உள்ளே உள்ள சிசிடிவி கேமரா கருப்பு நிற ஸ்பிரே அடிக்கப்பட்டு இருப்பதையும் பணம் நிரப்பும் பகுதியில் உள்ள ரகசிய குறியீட்டு எண் லாக்கர் பகுதியை உடைக்க முற்பட்டு இருப்பதையும் கண்டு பணம் கொள்ளை போய் உள்ளதா என்பதை அவர்கள் ரகசிய குறியீட்டு எண் போட்டு பணத்தை சரி செய்த போது ஏடிஎம் மையத்தில் இருந்த 25 ஆயிரத்து 200 ரூபாய் கொள்ளை போகாமல் அப்படியே தப்பி இருந்தது தெரியவந்தது.
தனியார் பணம் நிரப்பும் நிறுவன மேலாளருக்கு மட்டும் தகவல் கூறிய ஊழியர்கள் அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்காமல் விட்டு விட்டுள்ளனர். திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் மையங்களை உடைத்து 72 லட்சம் ரூபாய் மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்கள் உள்ள காவல் நிலை உட்பட்ட பகுதியில் ஏடிஎம் மையங்களை ஆய்வு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை விடுத்திருந்த நிலையில் பென்னலூர்பேட்டை காவல் நிலைய உட்பட்ட பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தை நேற்று இரவு 9 மணி அளவில் பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் கவிதா என்பவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கருப்பு நிற ஸ்ப்ரே அடிக்கப்பட்டு இருப்பதையும் ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண் பகுதியில் உள்ள லாக்கர் உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதையும் கண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான போலீசார் ஏடிஎம் மையத்துக்கு விரைந்து வந்து கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தையும் ஆய்வு செய்து கட்டட உரிமையாளர் சங்கர் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருவள்ளூர் முதல் ஊத்துக்கோட்டை செல்லக்கூடிய சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் கொள்ளை முயற்சிகள் மேற்கொண்ட கொள்ளையர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் ஏடிஎம் மையத்தில் இரவு காவலாளி இல்லாததால் துணிச்சலாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து உடைத்து கொள்ளையர்கள் 72 லட்சம் ரூபாய் மேல் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பயும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.