பகலில் ஏசி மெக்கனிக், இரவில் ஏசி காப்பர் குழாய் திருடன், சிட்லபாக்கத்தில் 20 விடுகளில் கைவரிசை காட்டிய பலே திருடனை 100 சிசிடிவி கேமராகாட்சிகளை ஆய்வு செய்து செஞ்சி சென்று கைது செய்து சிறையில் அடைத்த சிட்லபாக்கம் குற்றப்பிரிவு போலீசார்.
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஸ்ரீசர்வமங்கலாநகரில் கடந்த ஒருவாரம் முன்பாக அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் ஏசி பெட்டியில் காப்பர் குழாய்களை சேதப்படுத்தி வெட்டி திருடப்பட்டது. இந்த செய்தி அப்பகுதியில் உள்ள வாட் ஆப் குழுக்களில் கவுன்சிலர் ஜெகன் மூலம் பதிவிடப்பட்டு தீயாய் பரவியது. அடுத்து இரண்டு நாட்களில் முத்துலஷ்மி நகர் உள்ளிட்ட அடுக்குமாடி விடுகளில் 7 வீடுகளில் ஏசியை சேதப்படுத்தி அதில் 5 பெட்டியில் இருந்து காப்பர் குழாய்களை திருடன் சுருட்டி சென்றுள்ளான்.
இந்த தகவல் ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் வெளியாகி தேடி வந்த நிலையில் 5 நாட்கள் கழித்து அதே அடுக்கு மாடி குடியிருப்பில் சேதப்படுத்தி விட்டு சென்ற 2 ஏசி பெட்டிகளின் காப்பர் குழாய்களையும் மீண்டும் மழைநீர் வெளியேறும் குழாய் பிடித்து ஏறிசென்று எடுத்து சென்றான். இதுபோல் சுற்றுவட்டத்தில் 20 வீடுகளில் ஏசி பெட்டி சேதப்படுத்தி காப்பர் குழாய் திருடி சென்ற நிலையில் சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் முத்து லஷ்மி நகர் பகுதியினர் 5 பேர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியபோது அதிகாலை 4 மணியளவில் அசந்து தூங்கும் நேரத்தில் மித வேகத்தில் இருசக்கர வானத்தில் வரும் நபர் உருவம் தெரிந்தத. ஆனால் அந்த இருசக்கர வாகனத்தின் எண் கண்டுபிடிக்க தெளிவான சிசிடிவி பதிவை பார்த்து அந்த இருசக்கர வாகன எண் குறித்து விசாரித்தபோது சிட்லப்பாக்கம் ராகவேந்திராசாலையில் விஜய் என்கிற ஏசி மெக்கனிக் இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து சிசிடிவி காட்சியை காட்டி விசாரித்தபோது தன்னிடன் நான்கு ஆண்டுகளாக பணி புறியும் வினோத்(24) என்பதும் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்த அவன் ஏசி மெக்கனிக் வேலை பழகி உடன் பணி புறிந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்குள் வினோத் தன்னை போலீஸ் தேடுகிறது என உஷாராகி தன் செந்தவூரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கயரை கிராமத்தில் பதுங்கினார், ஆனாலும் சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், எஸ்.ஐ ராமச்ந்திரன், காவலர் டிக்சன் உள்ளிட்ட தனிப்பட்ட செஞ்சி கயரை சென்று வினோத்தை கைது செய்தனர்.
மேலும் காப்பர் குழாய் யாரிடம் விற்பனை செய்தாய் என விசாரித்தபோது எப்போதும் பணியின் போது பழைய காப்பரை போடும் கயலான் கடையில் போட்டதாக கூறிய நிலையில் கயலான் கடைக்காரிடமும் திருட்டு பொருளை வாங்கியது ஏன் என கேள்வி எழுப்பி விசாரணை செய்து வருகிறார்கள.
அதே நேரத்தில் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பகலில் ஏசி மெக்கானிக், இரவில் ஏசி காப்பர் குழாய் திருடனாக சிட்லப்பாக்கம் பகுதியில் வலம் வந்த நபரை 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்த சிட்லப்பாக்கம் போலீசார் உடனுக்குடன் மக்களையும், போலீசாரையும் உஷார் படுத்திய கவுன்சினர் ஜெகனை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.