Homeசெய்திகள்க்ரைம்குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

-

கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் விபரீதம் சம்பவம் காதலனுடன் மது அருந்தி இளம்பெண் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

இளம்பெணிண் இடுப்பு எலும்பு, கால் எலும்புகள் முறிந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணையின் போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவல்லிக்கேணியில் தனது தோழிகளுடன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் என்று தெரியவந்தது.

குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

திருவல்லிக்கேணி ரகளை சம்பவம் தொடர்பாக இந்த பெண் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் சோனாலி வயது 23. இவர் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் தனது தோழி சுதா ராணி வீட்டிற்கு நேற்று காதலன் மணிகண்டனுடன் சென்றுள்ளார்.

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் போதை தலைக்கேறவே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மது பாட்டிலை உடைத்து, சோனாலி தனது கழுத்தில் கீறிக்கொண்டார்.

மணிகண்டனிடம், நீ அடிக்கடி என்னை வந்து பார்க்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என பேசிக்கொண்டிருந்த சோனாலி திடீரென நான்காவது மாடிமேலிருந்து கீழே குதித்ததில் இரண்டு கால்கள் மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நள்ளிரவு ஆறு இளம் பெண்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு மாநகரப் பேருந்து முன் படுத்துக்கொண்டு போக்குவரத்து இடையூறு செய்தனர். போலீசாரையும் அவதூறான வார்த்தைகளால் பேசினர்.

இதில் சோனாலி சுதா ராணி, ரம்யா ஆகிய மூன்று பேரும் போலீசாரிடம் சிக்கினர். மற்ற மூன்று பெண்கள் தப்பி ஓடி விட்டனர். அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் இந்த மூன்று பேரையும் போலீசார் மீது இவர்களது முகவரியை கேட்டு தங்கள் வாகனத்திலேயே அழைத்துச்சென்று அவர்களது வீடுகளில் விட்டு விட்டு வந்தனர்.

போதை தெளிந்ததும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என இந்த பெண்களின் உறவினர்களிடம் தெரிவித்து விட்டு போலீசார் திரும்பினர்.

குடிபோதையில் பெண் தற்கொலை முயற்சி

ஆனால் மூன்று பேரும் வரவில்லை. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக சோனாலி, சுதா ராணி, ரம்யா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 சட்டவிரோதமாக தடுத்தல் இ.த.ச.- 294( பி) ஆபாசமாக பேசுதல், சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 41(1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தான் நேற்று இரவு மீண்டும் மது அருந்திவிட்டு காதலனுடன் ஏற்பட்ட தகராறில் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

MUST READ