- Advertisement -
முறையான விசாரணை இன்றி GST சான்றிதழ் வங்கியது குறித்து விசாரணை .GST இணை இயக்குநர் தகவல் .
திருப்பூர் பெத்தச்செட்டி பகுதியைச் சேர்ந்த 80 பெண்களின் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் வெளியான பகீர் பின்னணி.பின்னலாடை நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளன.ஆதார், பான் கார்டை பயன்படுத்தி GST கணக்குகள் தொடங்கி பல லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
முறையான விசாரணை இல்லாமல், விண்ணப்பதாரர்களின் முகவரியை கூட சரிபார்க்காமல் GST சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் GST சான்றிதழை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என GST இணை இயக்குனர் பேட்டி.