நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய இரண்டு பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு.
சென்னை திருவல்லிக்கேணி, குப்பமுத்து தெருவில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவரது கடைக்கு இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர்.

கடை ஊழியர் மகேஷ் என்பவர் தங்க வளையல் டிசைன்களை இருவரிடமும் காண்பித்துக் கொண்டிருந்தார்.
பின்னர், இரண்டு பெண்களும் சிறிது நேரம் கழித்து வந்து தங்க வளையல்களை வாங்கிக் கொள்கிறோம் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து கடை ஊழியர் மகேஷ் நகையை சரிபார்த்த போது ஒன்றரை சவரன் எடையுள்ள ஒரு தங்க வளையல் காணாமல் போனது தெரிய வந்தது.

கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்களில் ஒரு பெண் ஒரு தங்க வளையலை எடுத்து ஆடைக்குள் மறைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் ஜாம்பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


