- Advertisement -
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில் கொள்ளையர்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்.

பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்களின் சில முக்கிய புகைப்படங்கள் சிக்கி உள்ளதாகவும் அந்தப் புகைப்படத்தின் அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பின்பு தப்பிச்சென்ற இடங்கள் தொடர்பான விவரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தனி படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை அறிய திருவண்ணாமலைக்கு சென்னை போலீசார் விரைந்துள்ளனர்.


