சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மணலி புதுநகரை சேர்ந்த சிவா.

இவர்கள் இருவரும், நேற்று புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நரேஷ் ஜுவல்லரி மற்றும் சோகன் பாபு லால் ஜெயின் அடகு கடைகளில் சென்று தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும் அறுவைசிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது என்று கூறி ஆதார் அட்டை போன்ற இருப்பிட ஆவணங்களை காட்டி சுமார் 50 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து 1 லட்சத்து 84,000 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளனர்.
பின்னர் நகையை பரிசோதனை செய்தபோது போலி நகைகள் என தெரியவந்து.
இதனையடுத்து அடகு கடை உரிமையாளர்கள் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.