Homeசெய்திகள்க்ரைம்குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர்...

குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – மனநல ஆலோசகர் கைது

-

நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5, ஆதரவற்ற மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ; மனநல ஆலோசனை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது; மகளிர் போலீசார் அதிரடி நடவடிக்கை;

குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைதுநாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. சுனாமியின் போது கட்டப்பட்ட இந்த காப்பகத்தில், பெற்றோரை இழந்த ஆதரவற்ற பிள்ளைகள் 55 பேர் தங்கி பயின்று வருகின்றனர்.

இங்கு தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மனநல ஆலோசகர் சத்திய பிரகாஷ் என்பவர் பெண் குழந்தைகளுக்கு இதனை வகுப்பு எடுத்து சொல்லி தந்துள்ளார்.

இதனிடையே மாணவ மாணவிகளுக்கு, நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து வகுப்பெடுத்து சத்திய பிரகாஷ் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைதுஇதுகுறித்து விடுதி காப்பாளர் சசிகலா நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி இது தொடர்பாக அன்னை சத்யா காப்பகத்தில் உள்ள மாணவிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து அன்னை சத்யா காப்பகத்தில் பயின்று வரும் ஆதரவற்ற மாணவிகள் 5 பேர் அளித்த புகாரின் பேரில் மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் மீது போக்சர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ