வங்கி பணத்தை திருடும் நோக்கில் மின் கட்டணம் செலுத்தவில்லை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என போலியான குறுஞ்செய்திகள்
மின் கட்டணம் செலுத்தவில்லை, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்திகள் வந்தால் பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அதில் இருக்கும் எண்ணிற்கோ அல்லது பணம் அனுப்புமாறு அதில் கொடுக்கப்படும் லிங்க் கிளிக் செய்ய வேண்டாம், எனவும் மின்சாரவாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு குறுஞ்செய்திகள் வந்தால் மக்கள் உடனடியாக தங்கள் மின்சார கட்டணத்தை https://tnebltd.gvt.in/billstatus/billstatus.xhtml என்ற தளத்தில்சரி பார்த்து விட்டு, கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1930 தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற செய்திகள் அனுப்பி லிங்க் கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது .எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியாக மின்சார வாரியத்துறை எச்சரித்துள்ளது .மேலும் இது போன்ற செய்திகள் வந்தால் https://cybercrime.gvt.in என்ற இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.