Homeசெய்திகள்க்ரைம்பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்

பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்

-

பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்
ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ்

பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த 78லட்ச ரூபாய்  முடக்கம். புகார் அளித்தவர்களுக்கு பணம் கிடைக்காது, புகார் அளிக்காதவர்களுக்கு 1 மாதத்தில் பணம் கிடைக்கும் என கைதாவதற்கு முன்னதாக ஏ.ஆர்.டி உரிமையாளர் வீடியோ வெளியீடு செய்தனர்.

கைதான உரிமையாளர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டம் செய்துள்ளார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம், மாதம் 12 ஆயிரம் என கவர்ச்சிக்கரமான திட்டங்களை அறிவித்த நிறுவனம் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ்.  இந்த நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபின் நிர்வகித்து வந்தனர்.

இவர்களின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் லட்சங்களாக முதலீடு செய்தனர். பொதுமக்களின் முதலீடு பணத்தில் ஏ.ஆர்.டி மால், ஜுவல்லர்ஸ் என நாடு முழுவதும் தங்களின் கிளைகளை பெருக்கியது ஏ.ஆர்.டி நிறுவனம்.

சில மாதங்கள் வட்டியை வாரி இறைத்த ஏ.ஆர்.டி நிறுவனம் அதன் பிறகு வட்டியும், அசலும் தராமல் பொதுமக்களை ஏமாற்றியது. இதனால் பாதிக்கப்பட்டோர் 1760 பேர் 26கோடி ரூபாய் இழந்துவிட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ ஆர் டி மால், நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

குறிப்பாக ஏ ஆர் டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராபின் மற்றும் ஆல்வின் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் ராபின் மற்றும் ஆல்வினை நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

மேலும் உரிமையாளர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் இருந்த 78 லட்சம் ரூபாயை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் மோசடி செய்த பணத்தை சொத்துக்களாக வாங்கி உள்ளனரா அல்லது எங்கேயும் பதுக்கி வைத்துள்ளனரா என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே கைது செய்வதற்கு முன்னதாக ஏ ஆர் டி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில்    ஏ.ஆர்.டி யில் முதலீடு செய்த பொதுமக்கள் 28 நாட்கள் காத்திருக்க வேண்டும் பணத்தை தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் போலீசாரிடம் புகார் அளித்தவர்களுக்கு பணம் ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வரும் என தெரிவித்துள்ளார்.  எங்களது நிலம் மற்றும் நகை ஆகியவற்றை விற்று அதன் பிறகே கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

MUST READ