Homeசெய்திகள்க்ரைம்கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!

கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!

-

சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் சபரிநாதன் நடந்து சென்று கொண்டிருந்த போது பெண் உள்பட 3 பேர் சபரிநாதனை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சபரிநாதன் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஹரிஹஷரசுதன், அஜித், ஷோபாராணி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ