Homeசெய்திகள்க்ரைம்ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை - செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை – செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

-

- Advertisement -

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி என்பவருடைய மகன் ராம்குமார் (30). இவர்  தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகின்றார். வாலாஜாபாத் அருகே தென்னேரி பகுதியை சேர்ந்த தனது உறவினர் 30 வயது இளம் பெண்   வீட்டிற்க்கு அடிக்கடி ராம்குமார் சென்று வருவார். அப்போது ராம்குமார் தென்னேரி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி, சினிமா, கடற்கரை, போன்ற பல இடங்களுக்கு இளம் பெண்ணுடன் சுற்றி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

we-r-hiring
ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை - செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
ராம்குமார்

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை கர்பமாக்கி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. எழிலரசி குற்றவாளியான ராம்குமார்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

MUST READ