spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை...!

காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே பூண்டி காப்பு காட்டில் காகங்களை விஷம் வைத்து பிடித்த  தம்பதியினரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.

காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை...!பிடிக்கப்படும் காகங்கள் திருவள்ளூரில் தெருவோர கடைகள், தாபாக்கள்  பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அசைவ பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அசைவ உணவகங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

we-r-hiring

இதனால் சில கடைகள் லாபம் பார்ப்பதற்காக தரமற்ற சிக்கன் மட்டன் என உணவு விற்பதால் அதை பொதுமக்கள்  உட்கொள்வதால்  வயிற்றுப்போக்கு ஏற்படுவதும், சிலர் உயிரிழக்கும் நிலை நெகிழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழகத்தில் அடிக்கடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்கள் உன்னும் உணவகங்களில் அதிரடி சோதனைகளை  மேற்கொண்டு தரமற்ற கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த  நயப்பாக்கம் காப்புக்காடு பகுதியில் காகங்களுக்கு விஷம் வைத்து பிடிக்கப்படுவதாக திருவள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் பேரில்  அங்கு சென்ற வனத்துறையினர் காகங்களுக்கு மிக்சரில் விஷம் வைத்த ரமேஷ் – பூச்சம்மா தம்பதியினரை கைது செய்து அவர்களிடமிருந்த 19 காகங்களை மீட்டனர்.

இத்தகைய காகங்களை விஷம் வைத்து கொன்று சாலையோர உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இயங்கும் பிரியாணி கடைகளுக்கும் மதுபான பார்களுக்கும் விற்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அத்தம்பதிகளுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் அடங்கிய 7 பேர் கொண்ட குடும்பம் என்பதால்  அசைவ இறைச்சி வாங்குவதற்கு பணம் இல்லாததால் பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காகவே காகங்களை பிடித்ததாக  வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். காகங்கள் கொள்வது வன பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தில் வராததால் தம்பதிகளுக்கு அத்துமீறி காட்டில் புகுந்து காகத்துக்கு விஷம் வைத்ததால் 5 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர்.

விஷம் மருந்து வைத்து பிடிக்கப்பட்ட காகங்களின் மாதிரிகளை தமிழ்நாடு வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைத்து. அத்தகைய காகங்களை திருவள்ளூர் வனத்துறை அலுவலக வளாகத்தில் குழி தோண்டி புதைத்தனர்.

காகங்களை பிடித்து தெருவோர  கடைகள் அல்லது மதுபான பார்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து அவைகள் பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்பது  குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள உணவகங்களில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என விலங்கு நல ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ