ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் என ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை திருவல்லிக்கேணி பெண் உதவி ஆய்வாளர் பூஜா மற்றும் காவலர் சுப்புலட்சுமி இருவரும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம், காவலர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பெண் காவலர் சுப்புலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கவனமாக ஓட்டக் கூடாதா? என காவலர் சுப்புலட்சுமி கேட்டதற்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார் அந்த இளைஞர் பெண் காவலர்களை ஒருமையில் பேசியுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் பூஜா, இளைஞரின் இருசக்கர வாகன சாவியை எடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த இளைஞர் உதவி ஆய்வாளர் பூஜாவின் கையை பிடித்து முறுக்கியுள்ளார்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். பெண் காவலர்களிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பிடித்து விசாரித்ததில், ராயப்பேட்டையை சேர்ந்த உமர் உசேன்( வயது 24 )என்பதும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா் என தெரிய வந்தது.
இவரது தந்தை சென்னை துறைமுகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் பூஜா அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமர் உசேனை கைது செய்தனர். அவரைப் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும் படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாயும் – மனைவியும் கூட்டாளிகள்… குடும்பத்தோடு சிறை சென்ற பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் மறுபக்கம்..!