Homeசெய்திகள்மாவட்டம்மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR –...

மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

-

- Advertisement -

அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கடுமையான மருத்துவ அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட சட்டப் போராட்டமாக, நல்லடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடல் நாளை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!​சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு, பாரதி தெருவைச் சேர்ந்த சீனு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது மகள் நெஸ்லின் ரியா. கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமிக்கு லேசான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதற்காக, டிசம்பர் 3ஆம் தேதி மதியம் அம்பத்தூர் எம்.டி.எச் சாலையில் உள்ள தேஜா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். ​அங்கு தகுந்த குழந்தை நல மருத்துவ நிபுணர் இல்லாத சூழலில், மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக் விஜய் தேஜா ஆகியோர் சிறுமிக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மறுநாளான டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் சிறுமி நெஸ்லின் ரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

​விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை
​மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தாய் ஜிஷா கடந்த டிசம்பர் 10ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் விரிவான விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ​மருத்துவக் குழு நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. தகுந்த குழந்தை நல நிபுணரின் ஆலோசனையின்றி, சிறுமிக்கு அவளது வயதுக்குத் தேவையான அளவை விட ‘அதிக டோஸேஜ்’ (Overdosage) மருந்து கொடுக்கப்பட்டதே சிறுமியின் கார்டியாக் அரெஸ்ட் (இதய முடக்கம்) மற்றும் மரணத்திற்கு முக்கியக் காரணம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ​இதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 106(1)-ன் கீழ் (மருத்துவ அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக் விஜய் தேஜா ஆகியோர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

we-r-hiring

​”நம்பிக்கையோடு சென்ற மருத்துவமனையே உயிரைப் பறித்தது” – தாய் ஜிஷாவின் உருக்கமானப் பேட்டி
​இதுகுறித்து கண்ணீருடன் பேட்டியளித்த சிறுமியின் தாய் ஜிஷா, ​”என் இரு குழந்தைகளும் பிறந்தது இதே மருத்துவமனையில்தான். கடந்த 12 வருடங்களாக இவர்களை நம்பிமட்டுமே நாங்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்தோம். டெங்கு, மலேரியா பரிசோதனைகள் எல்லாம் நார்மலாகத்தான் இருந்தது. ஆனால், குழந்தைக்குக் காய்ச்சலும் வாந்தியும் நிற்கவில்லை. மறுநாள் மாலை கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தை சுருண்டு போனாள். ​6 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் 6.30 மணி வரை வரவில்லை. நர்சுகளும் அலட்சியமாகப் பேசினர். 7.15 மணிக்கு மேல் சரோஜினி மேடம் வந்து ஒரு வித்தியாசமான நிறத்தில் டிரிப்ஸ் போட்டார்கள். அதை ஏற்றிய உடனே ‘எடுங்க எடுங்க’ என்று என் குழந்தை கதறினாள். ஆனால் நர்சுகள் எடுக்க மறுத்துவிட்டனர். 8.30 மணியளவில் படுத்திருந்த குழந்தை திடீரென ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அமைதியாகிவிட்டாள். குழந்தை இறந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் எங்களால் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியவில்லை” என்றார்.மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

​”பணமும் சொத்தும் தேவையில்லை; நீதிதான் வேண்டும்” – தாத்தா ஜோசப் ஆவேசம்
​சிறுமியின் தாத்தா ஜோசப் பேசுகையில், ​”டி.எம்.எஸ் அலுவலகமும், மெடிக்கல் கவுன்சிலும் இந்த மருத்துவமனையை நடத்தக் கூடாது என்று சொல்லியும், அவர்கள் சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். எங்களிடம் மூன்று முறை வந்து சொத்து தருகிறோம், அப்பார்ட்மெண்ட் தருகிறோம் என காம்ப்ரமைஸ் (சமரசம்) செய்ய முயன்றார்கள். வெள்ளைத்தாளில் கையெழுத்துக் கேட்டார்கள். எங்களுக்கு அவர்களது சொத்தோ, பணமோ தேவையில்லை. என் பேத்தியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்தத் தனியார் மருத்துவமனையை நிரந்தரமாக மூட வேண்டும். சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதுதான் மற்ற மருத்துவமனைகளுக்கும் பாடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

​நாளை உடல் தோண்டி எடுப்பு
​வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகவும், நீதிமன்றத்தில் முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும், நல்லடக்கம் செய்யப்பட்ட சிறுமி நெஸ்லின்ரியாவின் உடல் நாளை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, அரசு மருத்துவக் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

MUST READ