கரூர் அருகே கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 28 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூருக்குச் சென்ற மாணவர்

உயிரிழந்தவர் உகல் கிஷோர் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். இந்நிலையில், தனது சொந்த ஊரான திருப்பூருக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
டிப்பர் லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்
கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் குளத்துப்பாளையம் அருகே சென்றபோது, குறுக்கே வந்த டிப்பர் லாரி மீது மாணவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உகல் கிஷோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிசியோதெரபி படித்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! தரைமட்டமான கட்டடம் – தீயணைப்புத்துறையினர் விரைவு
