Homeசெய்திகள்மாவட்டம்விழுப்புரத்தில் சோகம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

விழுப்புரத்தில் சோகம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் சோகம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

மரத்தடியில் ஒதுங்கியபோது நேர்ந்த சோகம்

we-r-hiring

ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (45), சரவணன் (43) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.

மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த கருவேல மரத்தின் கீழ் இருவரும் ஒதுங்கி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் கார்த்தி, சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உறவினர்களுக்குத் தகவல்

அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள், கார்த்தி மற்றும் சரவணன் ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பிவைப்பு

இதையடுத்து, இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் ராதாபுரம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விழாவுக்கு அனுமதி கிடைக்காததால் பரபரப்பு – கோவில் வாசலில் காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

MUST READ