இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங்
நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிற்பகல் முதல் அவர் விமானப்படை தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்த ஏர் மார்ஷர்ல் அமர் ப்ரீத்ரீத் சிங், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பணியாற்றி வந்தார். இந்திய விமானப்படையில் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங்குகளையும் அமர் ப்ரீத்ரீத் சிங் வகித்துள்ளார்.