Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகம்...

டெல்லியில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பிரதமர் மோடி வரவேற்பு!

-

- Advertisement -

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நாளை (12.09.2026) மற்றும் நாளை மறுநாள் (13.09.2026) ஆகிய இரு நாட்கள் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து, அவருக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கி வரவேற்றார்.

டெல்லியில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பிரதமர் மோடி வரவேற்பு!

we-r-hiring

டெல்லியில் கூடும் உலகத் தலைவர்கள்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பில், கடந்த 2024-ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்தன. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்தோனேசியாவும் உறுப்பினராகச் சேர்ந்ததை அடுத்து, தற்போது 11 நாடுகளுடன் இந்த அமைப்பு விரிவடைந்துள்ளது.

இத்தகைய சூழலில் டெல்லியில் நடைபெறும் 18-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்டப் பல உலகத் தலைவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

அதிபர் புதினுக்குத் திருக்குறள் பரிசு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (11.09.2026) அதிகாலை டெல்லி வந்தடைந்த அதிபர் விளாடிமிர் புதினை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங் விமான நிலையத்திற்கு நேரில் சென்று முறைப்படி வரவேற்றார். தனைத் தொடர்ந்து, அதிபர் புதினைச் சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்குத் திருக்குறள் புத்தகத்தின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி:

டெல்லியில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பிரதமர் மோடி வரவேற்பு!

“மாபெரும் திருவள்ளுவரின் அழியாத ஞானத்தை மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து கொண்டு சேர்க்கும் வகையில், திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புதினுக்கு பரிசளித்தேன்.” — பிரதமர் நரேந்திர மோடி

முக்கிய விவாதங்களும் பலத்த பாதுகாப்பும்
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தங்கள், சர்வதேச வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்படவுள்ளன. உலகத் தலைவர்களின் வருகையையொட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் மற்றும் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

BRICS மாநாட்டில் மோடி–புடின் நேருக்கு நேர் சந்திப்பு! இந்தியா–ரஷ்யா உறவில் முக்கிய பேச்சுவார்த்தை

MUST READ