தெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தனது உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பாக தம்பிகளுக்கு ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லுரி ஒன்றுல் டிப்ளமோ படித்து வந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் மாணவியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அந்த பெண், தனது 2 சகோதரர்களுக்கும் ரக்சா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது