spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா - அத்வானிக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா – அத்வானிக்கு அழைப்பு

-

- Advertisement -

பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள நாட்டின் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சன்னியாசிகள் மற்றும் மடாதிபதிகள் என சுமார் 8,000 பேருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளுமாறு அத்வானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்ம பூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்காற்றியது குறிப்பிடதக்கது.

MUST READ