Homeசெய்திகள்இந்தியாஅருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

-

 

அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. தார்மீக ரீதியாக இந்தியாவில் இருக்கும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சீனா, புதிய சீன பெயர்களையும் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

ஜங்னான் பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்புத் தொகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள்,1 ஏரி, 1 மலைப்பாதைக்கு தங்களின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் பெயர் சூட்டியிருக்கிறது சீனா. இதில் என்ன என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு ஜங்னான் என்பது இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட அருணாச்சலப்பிரதேசத்தின் சீனாவின் பெயர் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது.

அருணாச்சலப்பிரதேசத்தை தெற்கு திபெத்திய பகுதி என சொந்தம் கொண்டாடுகிறது சீனா. அந்நாட்டின் பொது விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 30 பெயர் கொண்ட பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. வரும் மே 01- ஆம் தேதியில் இருந்து இந்த பெயர்கள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் தொடக்கம்!

வெளிநாட்டு மொழிகளில் பெயர்கள் இருப்பது சீனாவின் பிரதேச ஆளுமைக்கும், இறையாண்மைக்கு உரிமைகளுக்கும் எதிரானது என்று சீன பொது விவகாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கு முன்பாக, 2017- ஆம் ஆண்டு அருணாச்சலப்பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களையும், 2021- ல் 15 இடங்களின் பெயர்களையும், 2023- ல் 11 இடங்களையும் சீன மொழியில் அந்நாடு பெயரிட்டுள்ளது.

அண்மையில் அருணாச்சலப்பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் சேலார் சுரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்திருந்தார்.

MUST READ