நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிர் பலிகளும் அதிகரித்து வருவதால் உச்சநீதிமன்றமே இது தொடர்பான தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதேபோல இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறுமுறைகள் உத்தரவாக வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உறுதியளித்து உள்ளது. வரும் காலங்களில் தெருநாய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தெருநாய்கள் கடியில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் இதன் மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல ரேபிஸ் நோயால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு அவர்களுக்கு வழங்கக்கூடிய மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.