பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த அரசியலும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.
பிரதம் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் நாகரீக அரசியலாகவும் பார்க்கிறோம். பிரதமர் நிகழ்ச்சியல் திருமாவளவன் பங்கேற்றது திருப்புமுனை என்று ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தாா். அதற்கு திருமாவளவன் பங்கேற்றதில் எந்த திருப்புமுனையும் இல்லை என ராஜேந்திரபாலாஜிக்கு வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளாா். வி.சி.க சனாதன எதிர்ப்பில் சமரகம் செய்யாது. சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அதிமுக இருப்பதையே ராஜேந்திரபாலாஜி பேச்சு உணர்த்துகிறது என விமர்சித்துள்ளாா். மேலும், தமிழ்நாட்டு மக்களும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளாா்.
