spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி! நாடகத்தின் பகீர் பின்னணி இதுதான்! செந்தில்வேல் நேர்காணல்!

தமிழ்நாட்டில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி! நாடகத்தின் பகீர் பின்னணி இதுதான்! செந்தில்வேல் நேர்காணல்!

-

- Advertisement -

பிரதமர் மோடியை நம்பினால் அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ் சிறந்த உதாரணம் ஆகியுள்ளார் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்தும், அவர் அணிந்திருந்த உடை தொடர்பாக வலதுசாரிகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வரும்போது பெரும்பாலும் வேட்டி – சட்டையுடன் வருகிறார். அப்படி வேட்டி – சட்டையுடன் வருவது ஒரு குறியீடு, அதில் ஒரு நுண் அரசியல் உள்ளது என்றெல்லாம் கிளம்பிவிடுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் கிடையாது. அந்த அந்த ஊருக்கு, அந்த மக்களின் வேடத்தை அணிந்து செல்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்களா? மணிப்பூருக்கு செல்லும்போது, அந்த ஊர் மக்களை போல செல்ல வேண்டும் என்கிறார்கள். மணிப்பூர் பற்றி எரிந்தபோது அங்கு பிரதமர் சென்றாரா? தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்துள்ளார். அவரிடம் நமது கேள்வி என்ன என்றால்? சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடி கொடுத்துள்ளார். ஆனால் தமிழுக்கு அவர் ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூ.160 கோடி. இன்றைக்கு சோழர்களை மோடி தூக்கிப் பிடிக்கிறார். ஆனால் பல்லாண்டுகளாக சோழர்களை தூக்கிப்பிடித்தவர் கலைஞர். சீமான் போன்றவர்கள் ராஜராஜ சோழனுக்கு நினைவிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்புகிறார். ஏன் ராஜராஜ சோழன் திராவிட கட்சியின் ஆட்சியில் தான் இறந்தாரா? அதற்கு முன்பிருந்தவர்களிடம் கேட்க மாட்டாரா சீமான்?

தந்தை ராஜாராஜ சோழன், தஞ்சையில் கட்டியதை போன்று, கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிரம்மாண்டமான கோவிலை கட்டியுள்ளார். ஏன் அவர் தனது தந்தைக்கு ஒரு நினைவிடம் கட்டவில்லை? ராஜாராஜ சோழனுக்கு சதய விழாவை நடத்தியவர் கலைஞர். ராஜராஜனுக்கு சிலை நிறுவியவரும் அவர்தான். ராஜராஜனின் சிலையை கோயிலுக்குள் வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார் என்று இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு திடீரென பாஜகவுக்கு சோழர்கள் மீது பாசம் வந்துவிட்டது? அப்படி உண்மையிலேயே சோழர்கள் மீதும், தமிழர்கள் மீதும் பற்றி இருந்தால், காவிரி வழக்கில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசு தண்ணீர் திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் என்கிற பல் இல்லாத அமைப்பை ஏற்படுத்தி, தண்ணீர் திறக்கும் அதிகாரத்தை மீண்டும் கர்நாடகாவிடமே கொடுத்துவிட்டது. அப்போது நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சென்று வழிபாடு நடத்தினால், எல்லோரும் நம்பி விடுவார்களா? கங்கையில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்கிறீர்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிவிடுகிறீர்கள்.

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், தொன்மையை எடுத்துரைக்க கூடிய கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கிறீர்கள். அங்கு அகழாய்வை நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணாவை பழிவாங்கும் நோக்கத்தோடு இடமாற்றம் செய்துகொண்டே இருக்கிறீர்கள். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் கி.மு.8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்கிறார்கள். உலகின் பல நாடுகளில் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டில் மக்கள் தமிழர்கள் ஒரு செம்மையான வாழ்வை வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளோம். ஆனால் அதை 8ஆம் நூற்றாண்டு என்று சொல்லாதே, அது கி.மு.3 என்று சொல்லுங்கள் என்று மத்திய அரசு வற்புறுத்துவதாக அமர்நாத் ராமகிருஷ்ணா சொல்கிறார்.  மோடி வருகிறபோது கோவிலில் தேவாரம், திருவாசகம் ஓதப்படுகிறது. ஆனால் இதே தேவாரத்தை சிதம்பரம் கோவிலில் பாட முற்பட்டபோது பார்ப்பன தீட்சிதர்களா கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். அப்போது மோடியோ, பாஜகவோ தலையிட்டனரா? பிறகு எப்படி தமிழக மக்கள் உங்கள் நம்புவார்கள்.

எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே வைத்து சந்தித்து விட்டார். ஆனால் ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. ஓபிஎஸ், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரியிருந்த நிலையிலும், அவரை சந்திக்கவில்லை. இதன் மூலம் பாஜகவை நம்பி சென்ற யாரையும் அவர்கள் ஈவு இறக்கமின்றி கைவிடுவார்கள் என்பதற்கு ஓபிஎஸ் ஒரு சான்று. சசிகலா , அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை பெற்று ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைப்பதற்காக காத்திருந்தார். அப்போது பாஜக, குருமூர்த்தியின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் இருந்தவர் ஓபிஎஸ். அன்றைக்கு பாஜக தான் அவரை இயக்கியது. அவரது மகன் ரவீந்திரநாத் முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், மோடியை வானளாவ புகழ்ந்து பேசினார்.

modi-ops

எடப்பாடி பழனிசாமி, எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியையும், சின்னத்தையும் தன் கையில் வைத்துக்கொண்ட ஒரே காரணத்திற்காக பாஜக அவரை கையில் எடுத்துக்கொண்டு ஓபிஎஸ்-ஐ கைகழுவி விட்டது. தினகரனை கண்டுகொள்ளாமால் விட்டுவிட்டது. ஓபிஎஸ், தினகரனை விரட்டியதால் ஆத்திரத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாய மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே நயினாரை பாஜக மாநிலத் தலைவராக நியமித்தனர். இது எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு பாடமாகும். இன்றைக்கு ஓபிஎஸ்-ஐ கழட்டிவிட்ட பாஜக, நாளை அவரையும் கழட்டிவிடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ