ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த ஜூன் மாதம் சிபு சோரன் உடல்நலக் குறைவினால் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஷிபு சோரனின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிபு சோரன் இன்று டெல்லியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக 38 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் மூன்று முறை ஜாாக்கண்டில் முதல்வராக பதவி வகித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்துள்ளார். இதன் பின்பு கடந்த 2008 – 2009 , 2009 -2010 ஆகிய காலகட்டங்களில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, அவரது மகனும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வருகிறார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் சிபு சோரன் பதவி வகித்தார்.
ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்! உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! கே.சி.பழனிசாமி பேட்டி!
