அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் இந்திய பங்குச் சந்தையில் 4வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எம்.பி. கூறியுள்ள நிலையில் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 50% வரியை அமைரிக்கா விதித்துள்ள நிலையில் மேலும் வரி விதித்தால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும் என வர்த்தக வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அரங்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வெனிசுலா மீது ராணுவத் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, கிரீன்லாந்தையும் கைப்பற்றுவேன் என்று பேசுவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 851 புள்ளிகள் சரிந்து 84,110 புள்ளிகளில் வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமானது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 280 புள்ளிகள் சரிந்து 25,856 புள்ளிகளில் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நடைபெற்ற 4,373 நிறுவனங்களின் 3,153 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து முடிந்தன.
1045 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே விலை உயர்ந்து வர்த்தகமாயின. இந்திய ஏற்றுமதி பொருள்கள் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எம்.பி. கூறியள்ள நிலையில் சர்வதேச அரசியல் பதற்றமும், அச்சமும் முதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் நடக்க வைத்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
TAPS ஓய்வூதியத் திட்டம் 2 வாரங்களில் அரசாணை வெளியீடு – தமிழக அரசு விளக்கம்


