தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) தொடர்பான அரசாணை, 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை (New Pension Scheme – NPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான அரசாணை இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அரசு தரப்பின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததுள்ளது.
சென்சார் போர்டு வேண்டுமென்றே ஒரு படத்தை நிறுத்தமாட்டார்கள் – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கருத்து



