நானும் விஜய் சாரை வைத்து படம் பண்ணேன். சென்சாரில் பிரச்சினை வந்தது. நானும் அதை சந்தித்து இருக்கிறேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி பேட்டியளித்துள்ளாா்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக தேனாண்டாள் முரளி போட்டியிடுகிறார். இதன் அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி பேசியபோது,
ஜனநாயகன் விவகாரம் தயாரிப்பாளருக்கு அது பெரிய சுமை தான். ஏன் சர்டிபிகேட் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. சென்சார் போர்டு மட்டுமின்றி எந்த அமைப்பாக இருந்தாலும் சங்கம் மூலம் சரிசெய்ய முயற்சிப்போம். சென்சார் போர்டு எல்லா படத்திற்கும் செய்யவில்லை. இது இண்டஸ்ட்ரி பிரச்சனை இல்லை, இது ஒரு படத்தின் பிரச்சனை. நானும் விஜய் சாரை வைத்து படம் பண்ணேன். சென்சாரில் பிரச்சினை வந்தது. நானும் அதை சந்தித்து இருக்கிறேன்.

சென்சார் போர்டு சும்மா ஒரு படத்தை நிறுத்தமாட்டார்கள். அதில் ஏதாவது காரணம் இருக்கும். அதற்கென ஒரு நடைமுறை இருக்கிறது. அது எல்லோருக்கும் சமம்தான். ஜனநாயகன் படத்தில் ஏதாவது காட்சியை நீக்க சொல்லி இருக்கலாம். ஜனநாயகன் கோர்ட்டில் இருக்கிறது. பராசக்திக்கு அனைத்தும் கிளியர் ஆகிவிட்டது என கேள்விப்பட்டேன் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி பேட்டி அளித்துள்ளார்.
மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!


