கவுகாத்தி – கொல்கத்தா இடையே ஜனவரி 17 முதல் படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆகிய அனைத்துப் பெட்டிகளிலும் முழுமையான ஏ.சி. வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான கட்டண முறையில் முக்கிய மாற்றமாக, பயணிகள் எவ்வளவு குறைந்த தூரமே பயணித்தாலும் குறைந்தபட்சமாக 400 கி.மீ.க்கான கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 கி.மீ. பயணம் செய்தாலும் 400 கி.மீ. தூரத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
400 கி.மீ. வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம்:
முதல் வகுப்பு : ரூ.1,520
இரண்டாம் வகுப்பு : ரூ.1,240
மூன்றாம் வகுப்பு : ரூ.960

400 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கான விவரம்:
முதல் வகுப்பு : கி.மீ.க்கு ரூ.1.20
இரண்டாம் வகுப்பு : கி.மீ.க்கு ரூ.3.10
மூன்றாம் வகுப்பு : கி.மீ.க்கு ரூ.2.40
டிக்கெட் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. கூடுதலாக விதிக்கப்படும் என்றும், கட்டணங்கள் மின்னணு முறையிலேயே ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்ட்டர்களில் டிக்கெட் பெற்றாலும், பணம் செலுத்துதல் மின்னணு முறையிலேயே நடைபெறும்.
மேலும், படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும், காத்திருப்பு பட்டியல் (RAC) வசதி கிடையாது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


