தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், நாய்க்கடியால் குழந்தை, முதியோர் பாதிக்கப்பட்டால் மாநில அரசுகள் பெரும் தொகையை தொகையை இழப்பீடாக வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தெருநாய் மேலாண்மை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், 5 ஆண்டுகளில் தெருநாய் பிரச்சனையை தீர்க்க மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர். விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படாதது மிகவும் கவலைக்கிடமானது என்றும் நீதிமன்றம் அதிருப்பதி தெரிவித்துள்ளது.

மேலும், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களும் நாய்க்கடி பிரச்சனையில் பொறுப்பேர்க்கப்படுவார்கள். தெருநாய்களை நீங்கள் அவ்வளவு நேசித்தால் வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எதற்காக நாய்கள் தெருவில் சுற்றித்திரிந்து மக்களை கடித்து அச்சுறுத்த வேண்டும் எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும் – முதல்வர்


