டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலையில் கட்டிடங்களை இடித்து அகற்றினா். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதன் காரணமாக அதிரடிப்படை போலீசார் அங்கு குவிந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. பொதுமக்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சி, கண்ணீர் புகை வீசப்பட்டதால் பலர் காயம் அடைந்தனா்.
ராம்லீலா மைதானம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கட்டிடங்களை இடித்து தள்ளிய டெல்லி அரசின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிபிஐ அனுப்பிய சம்மன்! இறுகும் பிடி; கைதாகும் விஜய்? செந்தில்வேல் நேர்காணல்!



