spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிபிஐ அனுப்பிய சம்மன்! இறுகும் பிடி; கைதாகும் விஜய்? செந்தில்வேல் நேர்காணல்!

சிபிஐ அனுப்பிய சம்மன்! இறுகும் பிடி; கைதாகும் விஜய்? செந்தில்வேல் நேர்காணல்!

-

- Advertisement -

சிபிஐ சம்மன், ஜனநாயகன் பட பிரச்சினை என்று விஜய்க்கு நெருக்கடி தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களின் வாக்குகளை விஜய்க்கு திருப்ப பாஜக முயற்சிப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.

senthilvel new
senthilvel new

விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் விசாரணைக்கு நடிகர் விஜய் நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தின் மூலம் பாஜக, விஜயை மிரட்டி என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறதா? என்றால் கிடையாது. ஆனால் ஒரு நாடகம் நடக்கிறது. பாஜக விஜய்க்கு கடுமையான அழுத்தத்தை கொடுப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.

we-r-hiring

அப்படி ஏற்படுத்துவதால் சிறுபான்மை மக்கள், குறிப்பாக கிறிஸ்தவர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் விஜயை பாஜக இப்படி கொடுமைபடுத்துகிறதா? என்று நினைத்து, அவரின் பக்கம் திரும்புவார்கள். அப்படி திரும்பினால் திமுக – காங்கிரஸ் அணிக்கு செல்கிற சிறுபான்மையினரின் வாக்குகள், பிரிந்து விஜய்க்கு செல்லும். அப்படி சென்றால் ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை நாம் நிறுவிவிடலாம் என அமித்ஷா நினைக்கிறார்.

நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

இது அமித் ஷாவினுடைய கணக்கு. விஜயை கிறிஸ்தவராக அடையாளம் காட்டுவது. அவருக்கு அழுத்தத்தையும், தொல்லையும் கொடுப்பதை போன்று ஒரு நாடகத்தை போடுவது. இது விஜயும், பாஜகவும் சேர்ந்து நடத்துகிற நாடகம். அப்படி ஒரு சூழல் வந்தால் தமிழ்நாட்டில் அமையப்போவது பாஜகவினுடைய ஆட்சி. அதிமுகவின் ஆட்சி அல்ல. புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா, மோடி தலைமையிலான என்டிஏ அரசு அமைய வேண்டும் என்றால் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறார். தமிழிசை ஒருபடி மேலே சென்று, அதிமுக ஆட்சி அமைக்கிறதோ இல்லையோ.  பாஜக ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பிரித்தாள நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்கி, அதில் திமுக பக்கம் நிற்கிற சிறுபான்மை மக்களை கொஞ்சம் விஜய் பக்கம் திருப்பிவிடலாம் என்று பாஜக நாடகம் ஆடுகிறது. அந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் சென்சார் சான்றிதழ் கொடுக்க தாமதம் செய்வது. எப்படியாவது சான்றிதழ் கொடுக்கத்தான் போகிறார்கள். படம் வெளியாகத்தான் போகிறது. ஆனால் அதுவரை விஜய்க்கு, நெருக்கடி கொடுப்பது போன்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனுடைய நோக்கம் வாக்குகளை பிரிப்பது.

சாமானிய மக்களாகிய நாம் மிகுந்த கவனத்தோடு இந்த தேர்தலை அணுக வேண்டும். அவர் அவர் மதம், வழிபாடு அவர் அவர்களுக்கு தான். அதை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு இடம் தரக்கூடாது. வெற்றிவாய்ப்புள்ள, நிலையான அரசை தரக்கூடிய அணிக்கு உங்களுடைய வாக்கு செலுத்தப்பட்டால் மட்டும்தான் உங்களுடைய வாக்கு செலுத்தப்பட்டதாக அர்த்தம். இல்லாவிட்டால் அது செல்லாத ஓட்டுக்கு சமம். நீங்கள் திமுக கூட்டணிக்கு செலுத்தாத வாக்கு என்பது பாஜகவுக்கு செலுத்தப்படும் வாக்கு ஆகும்.

மாற்றம், புதியவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என்று எதை நினைத்தாலும், மறைமுகமாக பாஜகவை அரியணையில் ஏற்ற நீங்களும் போயிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். வடஇந்தியாயவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது பாஜகவினர் தாக்குதல் நடத்தினார்கள். குறைந்தபட்சம் விஜய், கண்டித்தாரா? காரணம் அவருக்கு பாஜக கொடுத்திருக்கும் வேலைத்திட்டம் என்பது வேறு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ