பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளாா். வேளாண்மை, நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது என்றும், வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது என்று அவர் தெரிவித்துள்ளாா்.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழனின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்வதாக கூறிய பிரதமர், தமிழ்மொழி மற்றும் அதன் பண்பாட்டுச சிறப்புகள் உலகளாவிய அளவில் போற்றப்படுகின்றன என்றாா்.

மேலும், பொங்கல் பண்டிகை ஒரு மாநில விழாவாக மட்டுமல்லாமல்,சர்வதேச திருவிழாவாக கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளாா்.


