தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள், ரூ.3,000 ரொக்கம் இந்தாண்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தை தொடா்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள், ரொக்கப்பணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார். ஆனால் ரொக்கப்பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. புதுச்சேரி கஜானா காலியாக இருப்பதால் பொங்கல் பரிசு வழங்க மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கி உள்ளது அம்மாநில அரசு. தலைமை செயலாளர், நிதித்துறை அதிகாரிகளை அழைத்து முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். போதுமான நிதி ஆதாரம் இல்லை என்ற தகவலே முதல்வருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் 3.40 லட்சம் ரேசன் அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என்ற தகவலை அறிவித்தாா் முதல்வா் ரங்கசாமி. பொங்கல் முடிந்த பிறகு புதுச்சேரி ரேஷன் அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பொங்கல் பரிசாக முதலில் ரூ.4,000 அறிவித்த நிலையில் நிதிச்சுமை காரணமாக ரூ.3,000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ஆனந்த் மகிந்திரா…நன்றி தெரிவித்த முதல்வர்….



