spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் - பிரதமர்

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

-

- Advertisement -

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது.திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் - பிரதமர்இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”.  என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…

MUST READ