டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை பிடிப்போா்களை தடுப்பவா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சாிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு கடிக்கும் நாய்களால் நோய்கள் பரவக் கூடாது என்ற நோக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளது.
மேலும், தேவைப்பட்டால் போலீசாாின் உதவியுடன் அதிகாாிகள் நாய்களை பிடிக்கலாம் எனவும் எக்காரணம் கொண்டும் குழந்தைகள் சிறாா்கள் ரேபிஸால் பாதிக்கப்பட கூடாது எனவும் டெல்லியில் நாய்க்கடியால் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்துள்ளது எனவும் உச்சநீதிமன்றம் கவலை தொிவித்துள்ளது. நீதிபதிகள் ஜேபி பர்திவாலா ஆர் மகாதேவன் அவர்கள் தாமதமாக முன்வந்து வழக்கினை விசாரித்து சிறு குழந்தைகள் மற்றும் பொியவா்கள் நாய் கடிக்கும் என்கின்ற அச்சமின்றி நடமாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனை மிக தீவிரமான நிலையில் இருப்பதாகவும் நீதிபதிகள் தங்களுடை கருத்தினை தொிவித்துள்ளனா்.

நாய்கள் காப்பகங்களை அமைத்து அது குறித்த தகவல்களை எட்டு வாரத்திற்குள் தர டெல்லி மாநகராட்சி அரசுக்கு ஆணை நாய்களுக்கு கருத்தடை செய்யவும், தடுப்பூசி செலுத்தவும் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.
ஓட்டு திருட்டு! பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!