ஜார்க்கண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட மாநில தியோகர் மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் 30க்கும் மேற்பட்ட சிவபக்தர்கள், வாசுகிநாத் கோவிலுக்கு கன்வார் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஜமுனியா செவுக் வனப்பகுதியில் சென்றபோது போருந்து மீது எதிரே சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் குறைந்தது 18 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திகு வந்த மோகனப்பூர் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தில் காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.