Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்

காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்

-

- Advertisement -

பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் போராடி வந்தனர்.

we-r-hiring

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவதையொட்டி பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இருவரும் சந்தித்து பேசி இருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். முன்னதாக இருவரும் தாங்கள் வகித்து வந்த ரயில்வே துறை பணியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ