Homeசெய்திகள்இந்தியாடெல்லி போராட்டத்தில் 'பெல்லட் துப்பாக்கி' பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!

டெல்லி போராட்டத்தில் ‘பெல்லட் துப்பாக்கி’ பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!

-

- Advertisement -

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது ‘பெல்லட் துப்பாக்கிகள்’ (Pellet Guns) பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய சேமக் காவல் படை (CRPF) தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.டெல்லி போராட்டத்தில் 'பெல்லட் துப்பாக்கி' பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!

டெல்லி போராட்டத்தில் ‘பெல்லட் துப்பாக்கி’ பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!
கடந்த ஜூலை 20 அன்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில், அதிரடி விரைவுப் படையினர் (RAF) நடத்திய தாக்குதலில் இருவர் ‘பெல்லட்’ குண்டுகளால் காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் மற்றும் மாணவர் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

சி.ஆர்.பி.எஃப் அதிகாரியின் விளக்கம்
இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) கருத்து தெரிவித்துள்ள சி.ஆர்.பி.எஃப் அதிகாரி, “போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிரடி விரைவுப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை குறித்துத் தரவுகளைச் சரிபார்த்து (Verifying) வருகிறோம்,” எனக் கூறியுள்ளார். இருப்பினும், இதுவரை இது தொடர்பாக எந்தவொரு அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், முழுமையான உண்மை கண்டறியப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போராட்டத்தில் 'பெல்லட் துப்பாக்கி' பயன்பாடு: சி.ஆர்.பி.எஃப் (CRPF) தீவிர விசாரணை!

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் தற்போது டெல்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,

  • ஷேக் இர்ஷாத் மன்சூரி (25): முகத்திலும் மேல் உடலிலும் பாய்ந்த பெல்லட் குண்டுகளை அகற்ற லேடி ஹார்டிங் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • சாஹில் லோச்சப் (19): பெல்லட் குண்டு பாய்ந்ததில் வலது கண் பார்வையை இழக்கும் அபாயத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லி காவல்துறை பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதை முற்றிலும் மறுத்து வரும் நிலையில், சி.ஆர்.பி.எஃப் படையின் இந்த ‘சரிபார்ப்பு’ நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நீட் விவகாரம்: டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அரசுடன் இன்று CJP பேச்சுவார்த்தை!

MUST READ