Homeசெய்திகள்இந்தியாபீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!

பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!

-

 

 

பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!
Photo: ANI

பீகார் மாநிலம், பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், “தரமற்ற கட்டுமானத்தால் இரண்டாவது முறையாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. உரிய ஆய்வு நடத்தி பால விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், தான் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த போது, மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து தன்னுடைய பதவி விலகலை ஏற்கும் படி, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கேட்டுக் கொண்டேன். ரயில்வேக்கு என்று தனியாக இருந்த பட்ஜெட்டை, தற்போதைய பா.ஜ.க. அரசு ரத்து செய்துவிட்டது. ஒடிஷா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமா? இல்லையா? என்று கருத்துக் கூற விரும்பவில்லை” என்று கூறினார்.

மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியின் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் அப்டேட்

சுமார் 1,717 கோடி ரூபாய் மதிப்பில் பாகல்பூரில் ககாரியா அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கு இடையே கங்கை நதியின் நடுப்பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம், நேற்று (ஜூன் 04) மாலை 06.00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலம் இடிந்து விழுவது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ